வாக்காளர் ஒருவர் 4 வேட்பாளர்களுக்கு தனது வாக்கினை பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைத்து காணை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டில் வாக்காளர் தனது வாக்கினை மொத்தம் நான்கு சின்னத்திற்கு பதிவு செய்துள்ளார்.
அந்த வாக்காளர் 4 பதவிகளுக்கு என நினைத்து 4 சின்னங்களில் வாக்களித்தாரா என அனைவரும் குழப்பத்தில் இருந்துள்ளனர். தற்போது அந்த வாக்குச்சீட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.