சென்னை பெரம்பூரில் அனுமதியின்றி கட்டிய அடுக்கு மாடி கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்த மன்னடி போஸ்ட் ஆபீஸ் நகரைச் சேர்ந்தவர் யூஸப். இவர் அதே ஏரியாவில் சுமார் 350 square feet அளவு தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் இரண்டு அடுக்கு மாடி கட்ட சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்கினார். ஆனால் தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதி வைக்காமல் கூடுதலாக 50 square feet சேர்த்து 400 square feet அளவில் அடுக்கு மாடி கட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர்கள் யூசப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், 4 அடுக்கு மாடி கொண்ட கட்டிடம் கட்ட வரைபட அனுமதியை சென்னை மாநகராட்சியிடம் அவர் வாங்கவில்லை என்பது உறுதியாக மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இதையடுத்து வடக்கு கடற்கரை காவல் துறையினர் கட்டிடத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.