நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாடிக்கொம்பு பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜாதா தனியாக இருந்தபோது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுதாவை ஷோபாவில் கட்டிப்போட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்து 50,000 ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவா, ஆசைத்தம்பி, மதன்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.