சென்னையில் நேற்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 3,859
கோடம்பாக்கம் – 2,431
திரு.வி.க நகரில் – 2,167
அண்ணா நகர் – 1,974
தேனாம்பேட்டை – 2,518
தண்டையார் பேட்டை – 2,835
வளசரவாக்கம் – 1,054,
அடையாறு – 1,274,
திருவொற்றியூர் – 813,
மாதவரம் – 614
பெருங்குடி – 415,
சோளிங்கநல்லூர் – 390,
ஆலந்தூர் – 400,
அம்பத்தூர் – 807,
மணலி – 328 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 210 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.