கொரோனா குறித்த நேர்மையான உண்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழ்நிலையில், நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் விதமாக ஒரு சில பதிவுகளை இங்கே காணலாம். வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இக்காலகட்டத்தில் நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடிய உண்மைகளை காணலாம்.
- சீனாவில் இருந்த கடைசி கொரோனாவுக்கான மருத்துவமனை தற்போது மூடப்பட்டுள்ளது. புதிய நோயாளிகள் யாரும் வரவில்லை என்பதால் அதனை முழுவதுமாக மூடி விட்டார்கள்.
- 60க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த அருணகிரி 60க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முறையான சிகிச்சையால் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறார்கள்.
- இத்தாலியில் ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான நபர்கள் செத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்தியாவில் அது போன்று நடக்குமா என்றால் அது போன்று நடக்காது. இத்தாலியில் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்திய நாடு சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதேபோல் ஐரோப்பாவில் அதிக வயதானவர்கள் வாழக்கூடிய நாடு எது வென்றால் அது இத்தாலி. ஆனால் உலகத்திலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஆகவே இதற்கு இந்தியாவில் இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்காது.
- மிக முக்கியமான உண்மை என்னவென்றால் இந்தியாவில் இது ஒரு சமூக நோயாக மாறவே இல்லை. ஆக நேர்மறையான எண்ணங்களை விதைக்க கூடிய தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய பதிவுகளை ஷேர் செய்யலாம் .