Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலைக்கு 100 லோடு வரை கிராவல் மண் அள்ளியதாக புகார்…!!

திருப்பூர் உடுமலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நான்கு வழி சாலைக்காக கிராவல் மண் அள்ளியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதி இல்லாமலும், கூட்டுறவு சர்க்கரை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமலும் மடத்துக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்குவழி சாலைக்கு கனரக வாகனங்கள் மூலம் 100 லோடு வரை கிராவல் மண் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விவசாயிகள் பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |