Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான்கு வழிச்சாலை பணி தீவிரம்…. பொதுமக்களின் கோரிக்கை…. எம்.பி. நேரில் சென்று ஆய்வு….!!

நான்கு வழிச்சாலை பணிகளில் ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று எம்.பி. தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை 4 வழிசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விஜய் வசந்த் எம்.பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது 4 வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் அவருடன் இருந்தார். அதன்பின் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் 4 வழிச்சாலைகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதில் 2 இடங்களில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், சில இடத்தில் பாலங்கள் கட்ட வேண்டி இருக்கின்றது. இதனால் பணிகள் சற்று தாமதம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அதை இன்னும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டு இருப்பதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். மேலும் சில இடங்களில் சாலை பணிகள் தொடர்பாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையின்படி பேசி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இவ்வாறு நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணியில் ஏதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |