Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!!

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பது குறித்தும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது  அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் தினேஷ் குமார் என்ற இளைஞர் தம்மிடம்  தகாத முறையில் நடந்து கொண்டது குறித்து கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |