4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணியப்பன் தெருவில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரதீப் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரை படி கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பிரதீப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்த ஆணையின் நகலை அனைத்து மகளிர் காவல்துறையினர் பிரதீப்பிடம் வழங்கியுள்ளார்.