Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள இந்த 4 விஷயங்களை செய்யுங்கள்….!!

கொரோனாவில் இருந்து விடுபட  இந்த நான்கு கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்று திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சமூக வளைதளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. தினமும் 100க்கும் மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல்துறையும் மக்களிடையே  கொரோனா பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் கொரோனா பாதிப்பு பற்றி தனது சமூக வலைதளப் பக்கங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்,  கொரோனா பாதிக்காமல் தவிர்ப்பது எவ்வாறு? என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவுகளை உண்ண வேண்டும் என நான்கு அடிப்படை கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது, வெப்ப பரிசோதனை மேற்கொள்வது, கைகளை சுத்தம்  செய்தபின் சூப்பர் மார்க்கெட்டிற்குள் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் சரவணன் கூறியதாவது, “அனைவரும் கவனமாக இருங்கள், வீட்டில் உள்ள நம் குடும்பத்தினரின் பாதுகாப்பு என்பது வெளியில் செல்லும் நம் கையில்தான் உள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவோம், தகுந்த இடைவெளியை பின்பற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |