நடிகை மணிமேகலை 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தன் கணவருடன் நடனமாடியுள்ளார்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிரபலமாகி இருப்பவர் மணிமேகலை. இவரின் குறும்புத்தனமான பேச்சு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இவர் கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
ஏனென்றால் அவர் உடல் நலம் சரியில்லாது வீட்டில் இருந்தார். இந்நிலையில் 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தனது கணவருடன் காரில் சென்ற மணிமேகலை ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ காட்சியை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.