Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலில் பொறாமை” கொத்தனார் செய்த செயல்… 4 பேர் கைது…!!

வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது இரும்பு பலகை திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திரசேகரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த குணால், நிவேந்திரன், விஜயகுமார், முத்துகாமு ஆகிய 4 பேரை கைது செய்தனர் .

அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கொத்தனார் தொழில் செய்துவரும் முத்துகாமு என்பவர் சந்திரசேகர் வளர்ந்து வருவதை கண்டு பொறாமை பட்டதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவருக்கு சொந்தமான பொருளை திருடி தேனியில் இருக்கும் கடை ஒன்றில் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து திருடி விற்கப்பட்ட பொருட்களை காவல்துறையினர் மீட்ட தோடு இதில் தொடர்புடையவர்களை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |