ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் கனவை துணை ஆணையர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஹரீஸ். தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதனை ஹரிஷ் தனது பெற்றோர்களிடம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளார். சிறுவனின் இந்த ஆசை துணை ஆணையர் விக்ரமின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் நேற்று அவரின் பிறந்த நாளையொட்டி அவரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் அழைப்பு விடுத்திருந்தார்.
அழைப்பின் பேரில் அங்கு அவரை போலீஸ் ஆடை அணிந்து அழைத்துச்சென்றனர். இதனை பார்த்த துணை ஆணையர் பெருமிதம் கொண்டார். பின்னர் சிறுவனின் பிறந்தநாளை கேக் வெட்டி காவல் நிலையத்தில் கொண்டாடியுள்ளனர். இது சிறுவனுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நான்கு வயதிலேயே காவலரின் பாராட்டை பெற்ற ஹரிஷின் புகைப்படத்தை துணை ஆணையர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அவர் நிச்சயமாக ஐபிஎஸ் ஆவார் என்றும் கூறியிருந்தார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.