திருத்தணி அருகே 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தெக்களூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை ஓன்று உயிரிழந்தது. அந்தோணி என்ற 4 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்ததபோது எதிர்ப்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.