கோவையில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு பாலியல் சித்திரவதை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் நான்கு வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 51 வயது முதியவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2017ஆம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் கேகே புது நகர் பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோக பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.