அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.