Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை… கிராம மக்கள் கண்ட காட்சி…. துடித்து போன பெற்றோர்…!!

சிறுத்தை கடித்து குதறியதால் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள ராஜேந்திராபுரா என்ற கிராமத்தில் வசிப்பவர் முனிராஜ். இவரின் மனைவி தொட்டரம்மா. இந்த தம்பதிக்கு 4 வயதில் சந்துரு என்ற சந்திரசேகர் என்ற ஒரு மகன் இருந்தான். இவர்கள் வசிக்கும் கிராமம் வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சிறுவன் சந்துரு வீட்டின் முன்பு  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியில்  வந்த ஒரு சிறுத்தை திடீரென சந்துருவின் மீது பாய்ந்து கடித்து குதறியது.

அதன் பின் சந்துருவை வாயில் கவ்வியவாறு அங்கிருந்து ஓடிவிட்டது அந்த சிறுத்தை. கிராம மக்கள் சிறுத்தை சிறுவனை கடித்து குதறுவதை பார்த்து அதிர்ந்து போய் விரட்ட ஓடியுள்ளனர். ஆனால் அந்த சிறுத்தை கிராமக்கள் கையில் சிக்காமல் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இந்த நிலையில், சிறுத்தை கடித்து குதறியதால் அந்த 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்து விட்டான். சிறுவன் சந்துருவின் உடலை பார்த்து அவனின் பெற்றோர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Categories

Tech |