Categories
அரசியல் மாநில செய்திகள்

4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து…. இயற்கை காற்றை சுவாசிக்க…. நாளை விடுதலையாகும் சின்னம்மா…!!

சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 ஆண்டுகால சிறை வாசம் முடிந்து நாளை விடுதலையாக உள்ளார். இதையடுத்து திடீர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய உடல்நிலை சீராகவும்,ம் சசிகலா சுயநினைவுடன் இருப்பதாகபவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 4 வருட சிறைவாசத்திலிருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை காற்றை சுவாசிக்கிறார்.

உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் நாளை காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்து வாங்குகின்றனர். சிரைத்துறையில் நடைமுறைகள் முடிந்த 10.30 மணிக்கு விடுதலை  செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |