இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகள் காதலித்தவருடன் திருமணம் முடிய இருந்த நிலையில் புது காதலனுடன் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் 23 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் 24 வயதான இளைஞரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வரவேற்பு முடிந்ததும் மணமகனும், மணமகளும் தங்களுடைய அறைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காலையில் மணமகளை அழைக்க அவருடைய அம்மா சென்றுள்ளார்.
ஆனால் அங்கு மணமகள் இல்லை என்பதால் மணமகள் மாயமான தகவல் முழுவதும் காட்டுத்தீயாக பரவியதையடுத்து மணமகனும் அவருடைய குடும்பத்தினரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து மணமகளின் பெற்றோர் குடும்பத்தினர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மணமகள் வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். இந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மணமகளின் பெற்றோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் மணமகள் பிடிவாதமாக இருந்து தன்னுடைய புதிய காதலனுடன் சென்றுள்ளார். இதையடுத்து திருமணம் நின்று போனதால் மண்டபத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மணமகளின் இந்த முடிவால் அவருடைய பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.