Categories
தேசிய செய்திகள்

பைக்கில் செல்லும் போது விபரீதம்… 4½ வயது குழந்தை மாஞ்சா நூல் அறுபட்டு உயிரிழப்பு…!!

டெல்லியில் 4½ வயதான குழந்தை தனது அப்பாவுடன் பைக்கில் செல்லும்போது கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  
டெல்லியின் சோனியா விஹாரை சேர்ந்த கிரிஷ்குமார் என்பவர் தனது 4½ வயதான குழந்தை இஷிகாவுடன் ஜமுனா பஜாரில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு  பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின்  முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று சட்டென்று அறுத்துள்ளது. இதையடுத்து பதறிப்போன கிரிஷ்குமார்
கழுத்தில் அறுபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே  இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
டெல்லியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 4½ வயது குழந்தை உயிரிழப்பு
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-ஏ வின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியின் சுற்றுவட்டாரங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஞ்சா நூல் பயன்படுத்தக்கூடாது என்றும்,  விற்பனை செய்யக்கூடாது என்றும்,  இதனை அரசு தடை செய்ததும், மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |