அமெரிக்காவில் சிறுவர்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்திருந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் Gulfport என்ற பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய நபர் Darryl Anthony Parnell என்ற நபர், 4 வயதுடைய பெண் குழந்தையிடம் தவறாக நடந்ததால் கைதானார். எனவே, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிரவைக்கும் பல தகவல்கள் வெளிவந்தது.
அதாவது சிறுமிகள் நான்கு பேரை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்திருக்கிறது. அந்த நான்கு சிறுமிகளும் 6 வயதிலிருந்து 10 வயதுக்குள் இருப்பார்கள் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின் நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.