ஜம்மு காஷ்மீரில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மாயமான நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் வீட்டின் தோட்டத்தில் ஆதா ஷகில் என்ற 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனவிலங்கு நிபுணர்கள், இராணுவத்தினருடன் இணைந்து இரவு முழுக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் நேற்று பகலில் சிறுமியின் உடல் பாகங்கள், அருகில் உள்ள வனப்பகுதியில் கண்டறியப்பட்டது. சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதனையறிந்த குடும்பத்தினர் மனமுடைந்து கதறி அழுதனர். அப்பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கினர்.
அரசாங்கத்திற்கு பலதடவை வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கிராமத்தினர் கூறியுள்ளனர்.