பாகிஸ்தான் நாட்டில் காதல் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டு 4 வயதுடைய பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் இளைஞர் ஒருவரும், ஒரு பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த பெண்ணின் பெற்றோர் அதனை எதிர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் தன் சகோதரியையும் அந்த பெண் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் சமூகத்தை சேர்ந்தவர்கள், இரண்டு பெண்களையும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடத்தி சென்றுவிட்டனர் என்று கூறி கலவரம் செய்திருக்கிறார்கள்.
அப்போது அந்த சமூகத்தின் ஆண்கள், வேறு சமூகத்தினர் இருக்கும் இடத்திற்கு சென்று குடியிருப்புகளை அடித்து நொறுக்கி, தீ வைத்துள்ளனர். இதில், 4 வயதுடைய ஒரு பெண் குழந்தை பரிதாபமாக பலியானது. இச்சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.