கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகர் பகுதியில் உள்ள பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் மண்ணரிப்பு ஏற்பட்ட சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலம் வழியாக வாகனங்கள் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலை வைத்து பாலத்தை அடைத்தனர். ஆனால் சிலர் தடுப்பு வேலிகளை அகற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். நேற்றிரவு சேதமடைந்த பாலம் வழியாக ஆட்டோ ஒன்று சென்றது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலைதடுமாறி 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று பார்த்த போது டிரைவர்,2 பெண்கள் ஒரு குழந்தை விபத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.