Categories
உலக செய்திகள்

40 ஆண்டுகளாக…. செப்டிக் டேங்கில் மறைக்கப்பட்ட மனைவியின் உடல்…. கணவரின் கொடூர செயல்….!!!

40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்த டேவிட் வெனபிள்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1982-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி வொர்செஸ்டர் காவல்நிலையத்தில் தன்னுடைய மனைவி பிரெண்டா வெனபிள்ஸை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு வொர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் வெனபிள்ஸ் 40 ஆண்டுகளாக தன்னுடைய மனைவி காணாமல் போனதாக நாடகமாடி அவரின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்ததாக கூறினார்.

இவர் லோரைன் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அதற்கு இடையூறாக இருந்த தன்னுடைய மனைவியை கொலை செய்து செப்டிக் டேங்கில் உடலை மறைத்து வைத்துள்ளார். இதனையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது டேவிட் மனைவியின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இந்த எலும்புக் கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்தபோது அது டேவிட் மனைவியின் எலும்புக்கூடுகள் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் வழக்கை 6 வாரங்களுக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |