Categories
மாநில செய்திகள்

40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

தர்மபுரியில் இருளர் இன மக்களின் 40 ஆண்டுகளாக கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் பலருக்கும் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை போன்றவை வழங்காமல் இருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மன்றத்தில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனைவரும் கோரிக்கை வைத்திருந்தனர். வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 397 அளிக்கப்பட்டது.

இதையடுத்து 40 ஆண்டுகளுக்கான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களில், 52 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 12 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை அவர்களின் குடியிருப்புக்கு சென்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

Categories

Tech |