நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா 2-ஆவது அலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை மேற்கொண்டது. 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் 6 வயதிற்கு மேற்பட்ட 28,975 பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் 67 சதவிகிதம் பேருக்கு அதாவது சுமார் 80 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் ஏற்பட்டிருக்கும் என தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மீதமுள்ள 40 கோடி பேருக்கு எதிர்ப்புத் திறன் இல்லாததால் தொற்று அபாயம் உள்ளதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.