ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு மகேந்திர சிங் தோனி பங்கேற்ற முதல் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டத்தை விளாசினார். தனது 24வது அரைசதத்தை வெறும் 38 பந்துகளில் அவர் அடித்துள்ளார். 3 ஆண்டுகள் கழித்து தோனி அடித்த அரை சதமாக இது விளங்குகிறது. தோனியின் கடைசி அரை சதம் 2019 ஆண்டு ஏப்ரல் 21 தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்க்கு எதிராக கிடைத்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடிய விளையாட்டின் மூலம் தனது 40வது வயதில் அரைசதம் அடித்த வயதான இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அவர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் முதலிடம் பெற்றார். வெளிநாட்டு வீரர்களை சேர்த்து மூன்றாவது இடத்தை பிடித்து அதிக வயதில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.