தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து 40 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மரபணு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்த ஆதாரங்கள்
கிடைத்த பின்னரே மூன்றாம் தவணை தடுப்பூசி குறித்து பரிசீலனை செய்ய முடியும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.