40 வயது பெண்ணுடன் முதியவர் ஒருவர் உடலுறவு கொள்ளும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உடலுறவு ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் உடலுறவுக்கு பின் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இறந்தவர் தனது காதலன் என்று 40 வயது பெண் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணுடன் காலை 10 மணியளவில் புறநகர் குர்லாவில் உள்ள ஹோட்டலுக்கு முதியவர் சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஹோட்டலின் வரவேற்பறையைத் தொடர்புகொண்டு, அந்த நபர் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.