40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம் இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை கல்வி அதிகாரிகள் மட்டும் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஜனவரியில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் வட்டார கல்வி அதிகாரி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனத்திக்கான வயது வரம்பு 40 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அரசாணையின் நகல் தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது ஆன 58 வயது நிரம்பாத அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். சிலர் 1 மாதம், 2 மாதம் மட்டும் அரசு பணியில் இருந்துவிட்டு பல வருடங்கள் பென்ஷன் பெறும் நிலையும் இருந்தது. இதனால் அரசுக்கும் தேவையற்ற செலவு ஏற்பட்டதாகவும் இதை தவிர்க்கவே 40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.