பிரிட்டனில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவை இனி வரும் வாரங்களில் தினசரி சுமார் ஒரு மில்லியன் டோஸ்கள் செலுத்த முடியும் என்று கூறியுள்ளது. மேலும் 50 வயதுக்கு அதிகமான நபர்கள் அடுத்த வாரங்களில் அரசின் நோக்கத்தை விட மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்தக்கூடிய வாய்ப்பை பெறுவர்.
இதனிடையே சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் பண்டிகையிலிருந்து 40 வயதிற்க்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று வெளியான தகவல் தவறானது” என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் வகுக்கப்பட்டுள்ளது.
அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலும், ஜூலை மாத முடிவிற்குள் அனைத்து முதியவர்களுக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.