குகையில் இருந்தாலும் சிங்கம், சிங்கம்தான் என தனது விஜயகாந்தைப் பற்றி அவரது மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், இன்று கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் இந்த கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். நாங்கள் எல்லோருமே அவருடைய வளர்ப்புதான். அவர் மக்களுக்கு செய்தது ஆயிரம், லட்சம் இருக்கு.
40 வருஷமா இந்த மக்களுக்காக செய்திருக்கிறார். இன்னைக்கு அவர் உடல்நிலை சரியில்லாததால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் நான் சொல்கிறேன் குகைக்கு இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். தேமுதிக தலைவர் (விஜயகாந்த்) உடல் நலக் குறைவு காரணமாக அதிகம் வெளியில் வரவில்லை என்று கூறுகின்றனர். அவர் வெளியில் வரவில்லை என்றால் என்ன, அவரின் வளர்ப்பு நாங்கள் மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வோம். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்”என கூறியுள்ளார்.