Categories
மாநில செய்திகள்

40 – 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று கடலோரப்பகுதிகளில் 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி காற்றானது, குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |