கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 4,219,704 பேர் பாதித்துள்ளனர். 284,805 பேர் உயிரிழந்த நிலையில், 1,507,931 பேர் குணமடைந்துள்ளனர். 2,426,968 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 47,054 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது.
தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வந்ததால் சொல்ல முடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. அங்கு மட்டும் 1,370,999 கொரோனா தொற்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதித்த 256,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 80,870 பேர் உயிரிழந்துள்ளனர். 1,033,219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 16,514 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
உலகிலேயே அதிகப்படியாக 9,469,905 பரிசோதனை செய்து கொரோனவை கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வருகின்றது. இந்த நிலையில் தான் நேற்றைய பாதிப்பு அமெரிகாவுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 20,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல 750 பேர் உயிரிழந்துள்ளார். இந்த எண்ணிக்கை 40 நாட்களுக்கு பிறகு பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்துள்ளது.
கடந்த மார்ச் 29ஆம் தேதி 20,192 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 30ஆம் தேதி 815 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்குப் பின்னர்தான் இருபதாயிரத்துக்கும் கீழ்நோக்கி செல்லும் நிலையிலும் கொரோனா பாதிப்பும், ஆயிரத்துக்கும் கீழ் உயிரிழப்பும் வந்துள்ளது. இது அமெரிக்க மக்களிடையே மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.