ஊட்டியில் உயர்ரக விளையாட்டு பயிற்சி மையமொன்று அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர, திருவாரூர் தடகள சங்கம் சார்பாக டெல்டா மாவட்ட அளவிலான போட்டிகள் பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் ஓட்ட போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் உட்பட 103 வகையான போட்டிகள் நடைபெற்றது. இவற்றில் 12 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமிவாண்டையார் தலைமை தாங்கினார். மேலும் திருவாரூர் மாவட்ட தடகள சங்க தலைவர்அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு நிறுவனங்களின் இயக்குனர் திருநாவுக்கரசு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து போட்டியினில் வெற்றியடைந்தவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன் நிழச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை கொடுத்துள்ளார் . இதற்கு முன்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது “தமிழகத்தில் உலக அளவில் முன்மாதிரியாக இந்த துறையை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றோம்.
அதன்பின் சென்னையில் ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி, நான்கு ஒலிம்பிக் அகாடமி, ஒவ்வொரு தொகுதியிலும் 3 கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம், தேவையான அனைத்து இடங்களிலும் மைதானங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து வீரர்களுக்குரிய அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் எடுத்துள்ளார்.
ஆகவே விரைவில் வெளிநாட்டிலிருந்து வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்பின் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் 40 ஏக்கரில் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் நிலவும் குளிரான தட்பவெப்பத்தை சமாளிக்கும் வகையில் உயர்ரக பயிற்சி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில்காவிரி ஆற்றில் 22 இடங்களில் இருந்து ஐ.ஐ.டி குழு தண்ணீரின் மாதிரிகளை ஆய்வு மேற்கொண்டு மருத்துவ கழிவுகள் கலப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்குரிய ஆய்வு பணிகளை தொடங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதோடு, இதனை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று” அவர் தெரிவித்துள்ளார்.