Categories
சேலம் மாவட்ட செய்திகள்

40 பவுன் நகை….. ரூ3,00,000 பணம் கொள்ளை….. இன்ஜினியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை….!!

சேலத்தில் மாநகராட்சி இன்ஜினியர் வீட்டில் 40 பவுன் நகை ரூ3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் சேலம் மாநகராட்சியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ப்ரீத்தனா. இவருக்கு ஜிவிகா ப்ரிஜித் என  இரண்டு குழந்தைகள் உள்ளன. ஜீவிகா சென்னையில் மருத்துவ படிப்பு மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வர, ப்ரிஜித் சேலத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று  முன்தினம் சென்னையில் நடைபெற்ற பொறியாளர் கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றுள்ளார் அசோகன். மேலும் அவரது மனைவியும் தனது இளைய மகனை மாவட்ட அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு நேற்று அதிகாலை கூட்டிச் சென்று விட்டார். இதையடுத்து இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த அசோகன் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அசோகனிடம்  விசாரணை மேற்கொள்கையில் 40 பவுன் நகை ரூ 3 லட்சம் பணம் திருடு போயிருப்பதாக அவர் கூறினாலும் அவரது மனைவி வந்தால் மட்டுமே முழுமையாக எத்தனை பவுன் நகை திருடு போனது என்பது தெரியவரும்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டும், சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்தும் விசாரணை மேற்கொள்ள திருடர்கள் தெளிவாக ஹார்டிஸ்க்குகளையும் சேர்த்து திருடிச் சென்றுவிட்டனர். தற்போது திருட்டுத் தொழிலில் கை தேர்ந்த மர்மநபர்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். 

Categories

Tech |