Categories
அரசியல் மாநில செய்திகள்

40 ரூபாய் அதிகமா இருக்கு…! மக்கள் கஷ்டப்படுறாங்க… மாப்பியாவை உடைக்க சொன்ன அன்புமணி..

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது.

அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி  அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த மாபியாவை உடைக்க வேண்டும். அதற்கு அளவுகோலே ஆவின். ஆவின் பாலை விட நீங்கள் ஒரு ஐந்து ரூபாய் விற்று கொண்டு போங்க அது தப்பு இல்லை, ஆனால் நீங்கள் அவர்களை விட நீங்கள் 40 ரூபாய் அதிகப்படுத்தி விற்பது என்ன நியாயம்?  மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

அதே விலையில் விவசாயிகளுக்கு நீங்கள் விலை கொடுக்க மாட்டேங்கிறீர்கள், எவ்வளவு போராட்டம் செய்துதான் இப்போது தான் மூன்று ரூபாய் ஏற்றி உள்ளார்கள், 7 ரூபாய் ஏற்றி உள்ளார்கள். அது போதுமானதல்ல,  கொள்முதல் அதிகபடுத்துங்கள். கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது.

எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே பெய்தாலும் அங்கு தான் தண்ணீர் வரும். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |