கொலை உட்பட பல குற்றங்களை செய்த போலீஸ் அதிகாரி 40 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் டி ஏஞ்சலோ. போலீஸ் அதிகாரியான இவர் கோல்டன் ஸ்டேட் கொலையாளி எனும் பெயரில் அறியப்படுவார். கலிபோர்னியாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 40 வருடங்களாக எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் தவித்து வந்தனர்.
நிலையில் தனியார் இணையம் ஒன்றில் இவர் பற்றிய செய்தி வெளியாகி இவரது டிஎன்ஏ குறித்த தகவலை தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு கலிபோர்னியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்ட தற்போது 74 வயது ஆகின்றது. இந்நிலையில் ஜோசப் தான் செய்த 13 கொலை 45 துஷ்பிரயோக வழக்குகள் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் போன்றவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என தெரியவருகின்றது.