மத்தியப்பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது தொடர்ந்து 2-வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது, நேற்று மாலை 5 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.
இதுவரையிலும் 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டி இருக்கிறோம். கற்கள் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் ஆகிறது. மாநில பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் காவல்துறையினர், சிறுவனை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புக்குழுவினர் சிறுவனை பத்திரமாகக் காப்பாற்ற முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.