Categories
அரசியல் மாநில செய்திகள்

400 ஏக்கர் நிலம் அபேஸ்..! இலங்கை உடனே நிறுத்தணும்… பரபரப்பை கிளப்பி… எச்சரிக்கும் அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையிலே உலகப்புகழ் பெற்ற திருகோணமலையில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. ராமாயணத்தோடு தொடர்புடைய ராவணன் வழிபட்ட சிவன் கோவில் திருக்கோணமலை. அந்த திரிகோணமலையில் நம்முடைய ஞான சம்பந்த பெருமான் தேவார பாடலில் பாடி இருக்கிறார்.

அந்த திரிகோணமலைக்கு அருகாமையில் ராவணன் வெட்டு  இருக்கிறது. அதேபோல அந்த திரிகோணமலைக்கு அருகாமையிலே கன்னியா என்கின்ற பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கிறது. அதெல்லாம் சைவ சமயம்,  இந்து சமயம் தொடர்பான தொன்மங்கள், ஆதாரங்கள். இலங்கை இந்துக்களின் பூமி, சிவ பூமி.

ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கம் அந்த சிவ பூமியை தமிழர்களுடைய இந்து சமயத்தினுடைய தொன்மையான அடையாளங்களை எல்லாம் புத்தமயமாக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திரிகோணமலையில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் புத்த மத பிரச்சாரத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்த மயமாக்கல், சிங்கள மயமாக்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக இலங்கை துணை தூதரகத்திலும் கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |