வடிவேலுக்கு இம்சை அரசன் தெனாலிராமன் படம் போல் சந்தானத்திற்கு பிஸ்கோத் படம் அமையும் என்று இயக்குனர் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் அடுத்த திரைப்படம் பிஸ்கோத். இத்திரைப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். மேலும் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு முன்னரே முடித்துவிட்டனர். இத்திரைப்படம் நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு 400 – வது படம். இப்படத்தின் திரைக்கதை 18ஆம் நூற்றாண்டு உட்பட மூன்று காலகட்டங்களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. இக்கதையில் சந்தானம் ராஜசிம்மன் என்ற சரித்திர நாயகனாக நடித்துள்ளார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசர்களின் ஆடைகள், வாள் கத்தி, யானைகள், பல்லக்கு போன்றவை இத்திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இந்த காட்சிகள் 30 நிமிடம் இடம்பெறும் என்றும், மேலும் 500 நடிகர் நடிகையர்கள் மன்னர் கால உடைகளை அணிந்தே நடித்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் இதுபற்றி இயக்குனர் ஆர் கண்ணன் கூறும்போது சந்தானம் இந்த பிஸ்கோத் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அனைத்து ரசிகர்களையும் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
வடிவேலுக்கு இம்சை அரசன் தெனாலிராமன் படம் போல் சந்தானத்திற்கு பிஸ்கோத் படம் அமையும். இதில் சௌகார் ஜானகி, தாரா அலிஷா பெர்ரி, ஷ்வாதி முப்பாலா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் போன்று மேலும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தியேட்டரில் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும். இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா மன அழுத்தத்திலிருந்து மீட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை தருவதாக இப்படம் இருக்கும் என கூறியுள்ளார்.