இந்திய அரசு ஏறக்குறைய 400 கோடி டாலர்கள் மதிப்புடைய நிதி உதவிகளை இலங்கைக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், பல பிரச்சனைகள் உண்டானது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகள் அந்நாட்டிற்கு நிதி உதவிகளை வழங்கி வந்தது. அதன்படி சமீப மாதங்களில் சுமார் 400 கோடி டாலர் மதிப்பில் உணவு பொருட்களையும் நிதி உதவியையும் இந்தியா, அந்நாட்டிற்கு அளித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவினுடைய நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் ருசிரா கம்போஜ் கூறியிருக்கிறார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்கப்பட்டதிலிருந்து, உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உணவுப் பொருட்களையும் நிதி உதவியையும் இந்தியா அளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா, உணவு மற்றும் பொருட்களுக்கான விநியோக சங்கிலியின் அழிவு காரணமாக உண்டாகும் விளைவுகளை குறைக்க உதவி செய்து கொண்டிருக்கிறது. கடன்கள் அளிப்பதன் மூலமாக தேவைப்படும் நாடுகளுக்கு தொடர்ச்சியாக உதவி கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.