Categories
உலக செய்திகள்

400 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை – ஐநா தகவல்

உலகம் முழுவதும் உள்ள மக்களில் 400 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதத்திலாவது தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

உலக மக்கள் சந்தித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை கூறுகையில், “உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உலகம் முழுவதும் ஐந்தில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறார்கள். 300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 400 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதத்தில் ஆவது கடுமையான நீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர்.மேலும் கோடிக்கணக்கான மக்கள் நீர் மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பது உலகிற்கு மிகப்பெரிய பேரழிவு” என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ், எட்டு மாதங்களாக தொடர்ந்து உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி கண்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியது. அதுமட்டுமன்றி ஐக்கிய அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குழுவிற்கு தடுப்பு மருந்தை கண்டறியும் இறுதி கட்ட ஆய்வில் கவனத்தை செலுத்தி வருகின்றன. ரஷ்யா கண்டறிந்துள்ள உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |