களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தும்மிநாயக்கன்பட்டியில் களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த முனியப்பசாமி கோவில் அருகே இருந்த பாறையில் மிகவும் பழமையான ஒவிங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் அந்த ஓவியங்கள் கருப்பு, வெள்ளை, செங்காவி நிறம் கொண்ட பாறைகளில் வரையபட்டிருந்துள்ளது. இந்த ஓவியங்கள் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையானது என்றும், பழங்கால மக்களின் உணர்வுகளையும், அவர்களின் வெற்றிகளையும் ஓவியங்களாக வரைந்துள்ளனர் என்று தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியுள்ளார்.