தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட நிலையில் எழுத்து தேர்வு கட்டாயமாகப்பட்டுள்ளது. 4000உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களில் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது