Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அதே சமயம் காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும். போராட்டம் நடத்தும்கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்க அரசு உத்தரவிடவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |