Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. கவுரவ விரிவுரையாளர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆனை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதில் 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க உள்ளதாகவும் நேர்முகத் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அமைச்சரின் இந்த அறிவிப்பு கௌரவ விரிவுரையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |