Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: கோவை மாநகருக்குள் 4000 போலீசார் குவிப்பு …!!

கோவையில் பதற்றம் அதிகமாக இருப்பதால்,  கோவை மாநகரில் மட்டும் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

வெளி மற்றும் உள் மாவட்ட போலீசார் வரவைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகருக்குள் வரக்கூடிய அனைத்து சாவடிகளிலும் இருசக்கர வாகனங்களில் வரவருவதை கண்காணிக்கின்றார்கள். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு முக கவசம் அணிந்து கொண்டு வருபவர்களும் போலீஸ் சோதனைக்குட்பட்டுள்ளனர்.

அதேபோல வெளிமாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் மக்கள் அதிகமாக கூட கூடிய ஒரு பகுதி என்பதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு வரக்கூடிய பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதை செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.எல்டிஎப் போலீசார் 100 பேரும்,  தமிழ்நாடு கமாண்டோ போலீசார் 58 பேரும் ஆயுதங்களுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோவை நகருக்குள் நுழையக்கூடிய வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரின் 28 இடங்களில் வாகன சோதனையானது நடைபெறு  வருகிறது. மொத்தமாக 4000த்துக்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |