தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் வேலை வாய்ப்பு மற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.